Friday, June 4, 2021

https://youtu.be/XS7BYUcMpic

                                                                                                   பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் என்றால் ஒரு பொருளின் பெயரைக் குறிக்கும் சொல்லாக அமையும் என்றால் உண்மையே ஆகும்.  பெயர்ச்சொல் என்பதற்கு பெய்வது அதாவது இடுதல் என்றப் பொருளாக கூறியுள்ளார் (ஞா. தேவ நேயப் பாவாணர், 2012). தொடர்ந்து, பெயர்ச்சொல் பல தன்மைகளைக் கொண்டு அடங்கியுள்ளது. 

  1.  பெயர்ச்சொல் இடுகுறியாகவோ காரண அடிப்படையாகவோ அமையும். இடுகுறிப்பெயர் என்றால் காரணமில்லாமல் இடப்பட்ட வழிவழியாய் வழங்கும் பெயராகும். எடுத்துக்காட்டாக, கல் மற்றும்  மண். காரணப்பெயர் என்பது காரணத்தால் அமையக்கூடிய சொற்களைக் குறிப்பதாகும். எடுத்துக்காட்டாக, பறவை வானில் பறப்பதனால் அதற்கு பறவை என்ற பெயர் இடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காரண அடிப்படையில் தோன்றி இடுகுறியாய் மாறும் தன்மையும் பெயர்ச்சொல்லுக்கு அடங்கும். எடுத்துக்காட்டாக, நான்கு கால்கள் கொண்டிருப்பதனால் அதற்கு நாற்காலி என்ற பெயர் இடப்பட்டுள்ளது.
  2. பெயர்ச்சொல் வேற்றுமை உருபை ஏற்கும். பையன் என்ற சொல்லுடன் ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு இணைந்தால் பையனை என்ற சொல்லாக அமையும். 
  3. பெயர்ச்சொல் காலம் காட்டாது. மரம், வருதல், மற்றும் ஊர் போன்ற சொற்கள் இயல்பாக அமையும் எப்போதும் காலத்தைக் காட்டி நிற்பதுகிடையாது. 
  4. வாக்கியங்களில் எழுவாயாக மட்டும் தன்மை பெயர்ச்சொல்லுக்கு உண்டு. எடுத்துக்காட்டாக, மரம் வெட்டினான் என்ற வாக்கியத்தில் எழுவாயாக அமைந்திருக்கு மரம் என்ற சொல் பெயர்ச்சொல்லாக அமைந்துள்ளது. 
  5. பெயர்ச்சொல் எப்பொழுதும் பெயரெச்சம் முற்றுப் பெறுவதற்கு அமையும். எடுத்துக்காட்டாக, பெய்த மழை என்ற வாக்கியத்தில் பெய்த என்ற சொல் பெயரெச்சமாகவும் மழை என்ற சொல் பெயர்ச்சொல்லாகவும் அமைந்துள்ளது. 


பெயர்ச்சொல்லினை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம். அவை 
  • பொருட்பெயர் = உயர்திணைப் பெயர்களையும் உயிருள்ள உயிரற்ற அஃறிணைப் பொருள்களையும் குறிக்கும் சொற்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, உயிருள்ள பொருட்பெயராக மனிதன், ஆசிரியன், முருகன் என்றும், அஃறிணை உயிருள்ள பொருட்பெயராக பறவை, நண்டு, எறும்பு என்றும் மற்றும் அஃறிணை உயிரற்ற பொருட்பெயராக கடல், மலை, காற்று என்றும் கூறிப்பிடப்பட்டுள்ளது.

  • இடங்களை அல்லது இடமாகக் கருதப்படுவதைக் குறிப்பது இடப்பெயராகும். எடுத்துக்காட்டாக, இடம் சார்ந்தப் பகுதியாக அமையும் குறஞ்சி, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றையும் மற்றும் இடமாகக் கருதப்படும் வானம், நாடு, காடு என்றும் கூறிப்பிடப்பட்டுள்ளது. 

  • காலத்தை அல்லது பொழுதைக் குறிப்பது காலப்பெயர் ஆகும். எடுத்துக்காட்டாக, காலை, எற்பாடு, நேரம், மாதம் போன்ற சொற்கள் வழங்கப்பட்டுள்ளன. 

  • சினைப்பெயர். இதனை ஒன்றின் உறுப்பினை குறிக்க உதவும். தலை, கால், கிளை, பூ, செவி, இலை போன்ற ஒன்றின் உறுப்பினை குறிக்கும். 

  • ஒரு பொருளின் இயல்பினை அல்லது தன்மையை குறிப்பது பண்புப்பெயராகும். ஒரு பொருளின் தோற்றம், வடிவம், நிறம், அளவு, எண்ணிக்கை, தன்மை அல்லது குணம் குறிப்பது. மையீற்றுப் பண்புப்பெயர் என்பதும் பண்புப்பெயரின் கீழ் அடங்கும். ‘மை’ ஈற்றுடன் முடிகிற பெயர்கள் புணர்ச்சி வேறுபாடு கருதி அமைவதே இந்த மையீற்றுப் பண்புப்பெயர் ஆகும். எடுத்துக்காட்டாக, கருமை, செம்மை, இனிமை போன்றச்சொற்கள் அடங்கும். 

  • தொழிற்பெயர். இதனை ஒரு செயலை அல்லது வினையை அதாவது அடிச்சொல்லினை குறிக்க உதவும். எடுத்துக்காட்டாக, நடை, கல்வி, விற்பனை, பயிற்சி, காட்சி, பேசுதல் போன்ற சொற்களை கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய விளக்கங்களுடன் ஸ்லைச் தயார்ச் செய்யப்பட்டது.


மேலும், பெயர்ச்சொல்லினை காணொலியாக பார்க்க விருப்புவோர் கீழே உள்ள இணைப்பை அணுகலாம்.

https://youtu.be/XS7BYUcMpic                                        

No comments:

Post a Comment

https://youtu.be/XS7BYUcMpic                                                                                                     பெயர்ச்சொல்